சினிமா செய்திகள்
ஜி.வி. பிரகாஷ் படத்தின் புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
10 Oct 2023 10:27 PM IST

கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்குகிறார்.

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது.

ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்