திரைப்படம் வெளியான இரண்டே வாரத்தில் ஓ.டி.டி.யில் ஜி.வி. பிரகாஷ் படம்
|திரைப்படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேரளாவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்து மார்ச் 22-ம் தேதி ரெபெல் திரைப்படம் வெளியானது. பிரேமலு படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இப்படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படத்திற்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
படம் வெளியாகி 2 வாரம் ஆகிய நிலையில் தற்போது ஓ.டி.டி. தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
படம் வெளியாகி 2 வாரங்களில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக தொடர்ந்து செய்தால் மக்களுக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசை குறைந்துவிடும் என திரைப்பட விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.