< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
|13 Jan 2023 9:22 AM IST
பி.வி.ஷங்கர் இயக்கும் `கள்வன்' என்ற திரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
ஜிவி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு `கள்வன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இவானா நாயகியாக நடிக்கிறார். `நாச்சியார்' படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாசும் இவானாவும் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை, சாகசம், திரில்லர் படமாக தயாராகிறது. இந்தப் படத்தை பி.வி.ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். இவரே ஒளிப்பதிவும் செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜி.தில்லி பாபு தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன.