< Back
சினிமா செய்திகள்
தனுஷ் படத்தின்  அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

தினத்தந்தி
|
18 Jun 2022 5:25 AM IST

'வாத்தி' படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்

சென்னை.

'தோலி பிரேமா' திரைப்படம் மூலம் புகழ்பெற்ற தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் 'வாத்தி' படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். 'வாத்தி' படத்தின் பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து அவர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்