< Back
சினிமா செய்திகள்
தங்கலான் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
சினிமா செய்திகள்

'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

தினத்தந்தி
|
1 July 2024 3:39 PM IST

'தங்கலான்' படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 'தங்கலான்' படத்தின் பின்னணி இசைப் பணிகள் முடிவடைந்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

'தங்கலான்' படத்தின் பின்னணி இசைப் பணிகள் முடிந்தது. என்னுடைய சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளேன். படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அற்புதமான டிரைலர் விரைவில் வெளியாகி, உங்கள் மனதைக் கவரும். இந்திய சினிமா 'தங்கலான்' படத்துக்கு தயாராகுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்