< Back
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்துள்ள 13 படத்தின் டீசர் வெளியானது..!
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் நடித்துள்ள '13' படத்தின் டீசர் வெளியானது..!

தினத்தந்தி
|
21 Oct 2022 2:40 PM IST

நடிகர் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள '13' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் இணைந்து நடித்த 'செல்பி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார்.

திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் யூடியூபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.எப் காஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த நிலையில், '13' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்