'வாத்தி' படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்- தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்
|இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#vaathi #sir single announcement this week @dhanushkraja @SitharaEnts #venkyatluri
— G.V.Prakash Kumar (@gvprakash) November 1, 2022