கங்கனா இயக்கும் 'எமர்ஜென்சி' திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியில் ஜி.வி.பிரகாஷ்
|‘எமர்ஜென்சி’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கும் பணியில் ஜி.வி.பிரகாஷ் ஈடுப்பட்டுள்ளார்.
சென்னை,
முன்னனி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கங்கனா ரணாவத்தின் 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை உருவாக்கி வருகிறேன். இந்த பிரம்மாண்டமான திரைப்படம் விரைவில் வெளிவர காத்திருக்கிறது" என்று கங்கனாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
Composing with @KanganaTeam ji for #emergency songs and bgscore … @manojmuntashir @ManikarnikaFP … waiting for this mammoth of a film to unveil itself soon … pic.twitter.com/DoKvDRIp8F
— G.V.Prakash Kumar (@gvprakash) April 22, 2023 ">Also Read: