< Back
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும் எங்கள் நட்பு தொடரும் - சைந்தவி
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும் எங்கள் நட்பு தொடரும் - சைந்தவி

தினத்தந்தி
|
16 May 2024 6:08 PM IST

ஜி.வி. பிரகாஷை பிரிவதாக பாடகி சைந்தவி அறிவித்துள்ள நிலையில், அவர்களது உறவு குறித்து யூடியூப் சேனல்களில் வெளியாகும் வீடியோக்கள் வருத்தம் அளிப்பதாக சைந்தவி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தன.

ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்த 13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.

இதைத் தொடர்ந்து இருவரின் திருமண உறவு முறிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக, யூடியூப் சேனலில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், யூடியூப் வீடியோக்கள் குறித்து பாடகி சைந்தவி வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

யூடியூப் சேனல்களில் தங்களுடைய விவாகரத்து குறித்து முனையப்படும் கதைகள் பார்ப்பதற்கு வருத்தம் அளிக்கிறது. தங்களுடைய முடிவுக்கு மதிப்பளிக்க கோரி வேண்டுகோள் வைத்த பிறகும் இதுபோன்று கதைகள் பின்னப்படுவது வேதனையாக உள்ளது. ஒருவரின் குணாதிசயத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிதைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் இருவரின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்டது. நானும் ஜி.வி பிரகாஷ் குமாரும் பள்ளிப் பருவம் முதலில் நண்பர்களாக இருந்துள்ளோம். 24 வருட நட்பு. அதே நட்புடன் பயணிப்போம் என்று சைந்தவி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்