< Back
சினிமா செய்திகள்
குஜராத்தி படமான செலோ சோ இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை
சினிமா செய்திகள்

குஜராத்தி படமான 'செலோ சோ' இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

தினத்தந்தி
|
20 Sept 2022 6:59 PM IST

இந்தியா சார்பில் 2023 ஆஸ்கார் விருதுக்காக குஜராத்திப் படமான 'செலோ சோ ' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி,

சினிமா விருதுகளில் உயர்வானதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப் படுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தியா சார்பில் 2023 ஆஸ்கார் விருதுக்காக குஜராத்திப் படமான 'செலோ சோ ' என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பான் நளின் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் இதில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன் மற்றும் சினிமா மீதான அவனது காதலைச் சுற்றி நகரும் திரைப்படமாகும்.

மேலும் செய்திகள்