ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை வெளியிட்ட பாரீஸ் மியூஸியம்
|ஷாருக்கான் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பாரீஸில் உள்ள கிரேவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன. சமீபத்தில் உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த அவர், தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள கிரேவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.
போர்ப்ஸ் மேகசின் வெளியிட்டுள்ள பட்டியலின் படி நடிகர் ஷாருக்கான் தனது சம்பளத்தை ஒரு படத்திற்கு சுமார் ரூ 250 கோடி என நிர்ணயித்துள்ளார்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள லோகார்னோ திரைப்பட விழாவில், ஷாருக்கானுக்கு "பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.