< Back
சினிமா செய்திகள்
இந்தியாவிற்கு கிராமி விருது மழை பொழிகிறது- ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து
சினிமா செய்திகள்

இந்தியாவிற்கு கிராமி விருது மழை பொழிகிறது- ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

தினத்தந்தி
|
6 Feb 2024 7:11 AM IST

இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ,

இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து உருவாக்கிய சக்தி ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன.

இந்த ஆல்பத்திற்கு உயரிய கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. திஸ் மொமண்ட் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த ஆல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

."இந்தியாவிற்கு கிராமி மழை பொழிகிறது" என்று குறிப்பிட்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்