சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி
|நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குநர் அஸ்வின் கூட்டணியில் உருவாகும் படத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டான்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்தப் படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இந்தப் படத்துக்கு 'மாவீரன்' என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
படத்தில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் கவுண்டமணியும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்ததாகவும், அதற்கு படக்குழு சம்மதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
1980, 90 காலகட்டங்களில் நகைச்சுவையில் கோலோச்சிய கவுண்டமணி மீண்டும் திரையில் தோன்றுவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.