< Back
சினிமா செய்திகள்
அச்சம் என்பது இல்லையே படத்திற்கு நல்ல வரவேற்பு... ஈஷா ஆதியோகியை தரிசித்த படக்குழு...!
சினிமா செய்திகள்

'அச்சம் என்பது இல்லையே' படத்திற்கு நல்ல வரவேற்பு... ஈஷா ஆதியோகியை தரிசித்த படக்குழு...!

தினத்தந்தி
|
13 Jan 2024 2:29 PM IST

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படம் நேற்று வெளியானது.

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், தெழுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிட்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகியை படக்குழு தரிசித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த பதிவில், 'ஒரு தெய்வீக தொடக்கம்... 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1' படத்திற்கு கொடுத்த வரவேற்புக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்