'குட் பேட் அக்லி' - அப்டேட் கொடுத்த அஜித்தின் மேலாளர்
|அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னை,
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது. 'குட் பேட் அக்லி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது.
இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி,
'ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் குமாரின் சோலோ ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அடுத்ததாக அடுத்த மாதம் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். அதன்பின் தென் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.