5 கோடி பார்வைகளை கடந்த 'கோட்' படத்தின் டிரெய்லர்
|'கோட்' படத்தின் டிரெய்லர் அதிக பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'கோட்'. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 'கோட்' படத்தின் டிரைலர் 17ம் தேதி வெளியானது. இந்த டிரெய்லரில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கி சண்டை, கார் சேசிங், மோட்டார் சைக்கிளில் பறப்பது போன்ற சாகச காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இள வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளன.
2 நிமிடம் 51 வினாடிகள் நீளமுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டிரெய்லர் யூடியூபில் தற்போது வரை தமிழில் 5 கோடி பார்வைகளை கடந்து, டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இது குறித்த பதிவை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், கோட் படத்தின் தமிழ் மொழி டிரெய்லர் 24 மணி நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்ற கோலிவுட் டிரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. 'கோட்' படத்தின் டிரெய்லரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.