< Back
சினிமா செய்திகள்
பிரபு தேவாவுக்கு போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கோட் படக்குழு

image courtecy:twitter@vp_offl

சினிமா செய்திகள்

பிரபு தேவாவுக்கு போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கோட் படக்குழு

தினத்தந்தி
|
3 April 2024 3:27 PM IST

கோட் படக்குழு நடிகர் பிரபு தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் பிரபு தேவா, இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோட் படக்குழு நடிகர் பிரபு தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மாஸ்டர். அன்புடன் உங்கள் கோட் படக்குழு. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்