கோட் படப்பிடிப்பு: இப்படிதான் என்னுடைய நாள் தொடங்குகிறது- வெங்கட் பிரபு
|கோட் படப்பிடிப்பில் தயாரிப்பாளரின் குறும்புகளை வெங்கட் பிரபு நகைச்சுவையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின் நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.
இந்நிலையில் தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி வெங்கட் பிரபு நகைச்சுவையாக ஒரு பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஷ்வர்யா கல்பாத்தி இருவரும் வெங்கட் பிரபுவை கேள்வி கேட்குமாறு கைசைகையில் இருக்கிறார்கள். வெங்கட் பிரபு தலையில் பேஸ்பால் பேட் ஒன்றை அர்ச்சனா கல்பாத்தி வைத்துள்ளார். வெங்கட் பிரபு இருவரையும் கையெடுத்து கும்பிடுகிறார்.
இவ்வாறு அந்த காட்சி அமைந்துள்ளது. இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.