< Back
சினிமா செய்திகள்
த.வெ.க தலைவர் விஜய்க்கு கோட் பட தயாரிப்பாளர் வாழ்த்து
சினிமா செய்திகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு 'கோட்' பட தயாரிப்பாளர் வாழ்த்து

தினத்தந்தி
|
22 Aug 2024 8:40 PM IST

த.வெ.க தலைவர் விஜய்க்கு ‘கோட்’ பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தனது கட்சியின் கொடியை நடிகர் விஜய் உறுதிமொழி எடுத்து இன்று அறிமுகம் செய்து வைத்தார். கொடியானது சிகப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களில், 2 போர் யானைகள், வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், த.வெ.க. கொடி அறிமுகம் செய்யப்பட்டதையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு 'கோட்' பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் அண்ணா" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்