< Back
சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் 234-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கமல்ஹாசனின் 234-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தினத்தந்தி
|
6 Nov 2023 11:52 AM IST

கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்காலிகமாக 'KH 234' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் 'KH 234' படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்