< Back
சினிமா செய்திகள்
தோழர் சேகுவாரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!
சினிமா செய்திகள்

'தோழர் சேகுவாரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!

தினத்தந்தி
|
3 Oct 2023 1:33 PM IST

நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'தோழர் சேகுவாரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். சினிமாவில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில்தான் 'வெப்பன்' எனும் படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 'தோழர் சேகுவாரா' எனும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.டி.அலெக்ஸ் என்பவர் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜுடன் மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜின் பிறந்த நாள் ஆகும். அதனை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'தோழர் சேகுவாரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்