< Back
சினிமா செய்திகள்
நானி நடித்துள்ள சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
சினிமா செய்திகள்

நானி நடித்துள்ள 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

தினத்தந்தி
|
24 Feb 2024 4:18 PM IST

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அந்தே சுந்தரானிகி' படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் தனது அடுத்த படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்திற்கு தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என பெயர் வைத்துள்ளனர்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை 'ஆர்ஆர்ஆர்' படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நானியின் 40 வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 29 -ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்