< Back
சினிமா செய்திகள்
விரைவில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ...!
சினிமா செய்திகள்

விரைவில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ...!

தினத்தந்தி
|
26 Dec 2023 9:54 PM IST

இயக்குனர் ராம் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

சென்னை,

'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் ராம். தற்போது இவர் பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் நிவின் பாலியை வைத்து 'ஏழு கடல் ஏழு மலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மாநாடு' படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. அதன்படி படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவை ஜனவரி 2-ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்