< Back
சினிமா செய்திகள்
சசிகுமார் நடித்த பிரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
சினிமா செய்திகள்

சசிகுமார் நடித்த 'பிரீடம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

தினத்தந்தி
|
29 Sept 2024 9:52 PM IST

சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

'சுப்ரமணியபுரம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன் பின்னர், இயக்கத்தை கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினார் சசிகுமார். பின்னர் இவரது நடிப்பில் வெளியான 'நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி' போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் சமீபத்தில் வெளியான 'கருடன்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தன. இதற்கிடையில், கடந்த 20-ந் தேதி 'நந்தன்' படம் திரையரங்குகளில் வெளியானது.


சசிகுமார் 'பிரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்