'லால் சலாம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
|ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 'லால் சலாம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது
சென்னை,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 'லால் சலாம்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Happy Birthday THALAIVA Team LAL SALAAM wishes our MOIDEEN BHAI Superstar @rajinikanth a Happy Birthday! ✨ Khuda Hafiz
— Lyca Productions (@LycaProductions) December 12, 2023
▶️ https://t.co/3kBt1ffdJT
In Cinemas ️ PONGAL 2024 Worldwide ☀️ Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!@rajinikanth… pic.twitter.com/NGsc7l4is8