இப்படியாவது எனக்கு வாய்ப்பு கொடுங்க- விஜய் பட இசையமைப்பாளர் உருக்கம்
|இசையமைப்பாளர் மணிசர்மா பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் மணிசர்மா. இவர் விஜய்யின் 'ஷாஜஹான்', 'யூத்', 'போக்கிரி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இவர் தமிழில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண், மகேஷ் பாபு ஆகியோரின் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படி பல படங்களுக்கு இசையமைத்த மணிசர்மாவிற்கு வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோர் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். அவர்களின் எல்லா படத்திற்கும் நான் இசையமைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கொடுத்தல் ஒரு படத்திற்கு தமனுக்கும் ஒரு படத்திற்கு எனக்கும் தரலாம் அல்லது அவர்களுக்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு எனக்கு ஒரு படம் தரலாம். இப்படி செய்தால் வழக்கமான உணர்வு இல்லாமல் மாறுபட்ட உணர்வு ரசிகர்களுக்கு கிடைக்கும்" என்று கூறினார்.
பல முக்கிய படங்களுக்கு இசையமைத்துள்ள மணிசர்மா இப்படி நேரடியாக வாய்ப்பு கேட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.