பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் - நடிகை சமந்தா
|ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர், நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிப்பதை பார்த்து கண்ணீர் வடிப்பது உண்டு. நடிகை சமந்தாவும் தன்னை சில காட்சிகள் அழ வைத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "எத்தனையோ அப்பாவி பெண் குழந்தைகள் விருப்பம் இல்லாமல் விபசார கூடங்களில் ஜீவன் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த காட்சிகளை ஒரு படத்தில் பார்த்தபோது அடிவயிற்றில் இருந்து துக்கம் பொங்கி எழுந்து கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது.
அந்த நிலைமையில் இருக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதும் புரிந்தது. நீண்ட நாட்களாக அந்த காட்சிகளே நினைவுக்கு வந்து தூக்கம் இல்லாமல் தவித்தேன். பெண் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை சின்னா பின்னமாகி விடும் என்பது புரிந்தது'' என்றார்