வாரிசு படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியீடு
|நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தின் 'ஜிமிக்கி பொண்ணு' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த மாதம் 11-ம் தேதி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி பொண்ணு' பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.