< Back
சினிமா செய்திகள்
கில்லி ரீ-ரிலீஸ் -  நடிகை  திரிஷா நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

'கில்லி' ரீ-ரிலீஸ் - நடிகை திரிஷா நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
20 April 2024 5:45 PM IST

ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக கில்லி அமைந்துள்ளது.

சென்னை,

தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரிப்பில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், மயில்சாமி, பாண்டு, போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இப்படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு, ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய், பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் காரில் பயணம் செய்யும் பொழுது அர்ஜுனர் வில்லு பாடல் கேட்காமல் பயணம் முடிவுக்கு வராது.கில்லி திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 20 வருடங்கள் நிறைவடைகிறது. இதையொட்டி இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று இப்படம் வெளியாகி உள்ளது. கில்லி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது என 'கில்லி' ரீ-ரிலீஸ் குறித்து திரிஷா நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக திரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

வாழ்க்கை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது என்பதை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது. பிளாக்பஸ்டர் கில்லி கொண்டாட்டங்களுடன் இன்றைய பொழுது விடிந்துள்ளது. என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்