பேய் படம் 4-ம் பாகம்
|விஜய்சேதுபதி நடித்த `பீட்சா' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வந்தது. தற்போது மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்குமனு நடித்துள்ள பீட்சா 3-ம் பாகமும் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து `பீட்சா' பேய் படத்தின் நான்காம் பாகமும் தயாராக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, `பீட்சா' மூன்று பாகங்களின் வெற்றி `பீட்சா' வரிசையின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அபிமானத்தையும் தரமான உள்ளடக்கத்தை என்றுமே அவர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அளித்து வருகிறது.
எனவே அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் `பீட்சா' நான்காம் பாகம் விரைவில் தொடங்கும். இதன் இயக்குனர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.