< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பேய் படத்தில் சிம்ரன்
|19 March 2023 7:27 AM IST
தமிழில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து விட்டு இப்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராக்கெட்டரி, கேப்டன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்.
அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் தற்போது கைவசம் உள்ளன. இந்த நிலையில் சப்தம் என்ற பெயரில் தயாராகும் பேய் படத்தில் நடிக்க சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது சிம்ரனுக்கு 50-வது படம். இதில் ஆதி கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். லைலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அறிவழகன் டைரக்டு செய்கிறார்.
இதுவும் அறிவழகன் ஏற்கனவே இயக்கிய ஈரம் பேய் படத்தை போன்று வித்தியாசமான திகில் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.