விரைவில் திருமணம்... வைரலாகும் இந்திரஜா ரோபோ ஷங்கரின் கமெண்ட்..!!
|நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர். இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள். இவர் கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்ற நபருடன் இணைத்து 'மாமா' என்று தலைப்பிட்டு சில பதிவுகளை பதிவிட்டு வந்தார்.
அந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரிடம் 'இருவரும் காதலிக்கிறீர்களா?' 'எப்போது திருமணம்?' என தொடர்ந்து கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் இந்திரஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரது ரசிகை "உங்க வீடியோ பார்த்து தான, நீங்க அவரை கல்யாணம் பண்ணிக்க போறிங்களானு கேக்குறோம், ஆமா, இல்லனு பதில் சொல்லுங்க" என்றும் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள நடிகை இந்திரஜா "இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்! என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்" என்று பதில் அளித்துள்ளார். அதற்கு அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரையை சேர்ந்த கார்த்திக் 'தொடர்வோம்' என்ற தன்னார்வல தொண்டு நிறுவனத்தை தொடங்கி பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவி வருகிறார். இவருக்கு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பது ஆசையாம் அதனால் அந்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம் கார்த்திக். நடிகர் ரோபோ ஷங்கரும் மதுரையை சேர்ந்தவர் என்பதால் இருவரும் உறவினர்களாக இருக்க கூடும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.