< Back
சினிமா செய்திகள்
விரைவில் திருமணம்... காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ரஜிஷா விஜயன்
சினிமா செய்திகள்

விரைவில் திருமணம்... காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ரஜிஷா விஜயன்

தினத்தந்தி
|
6 Feb 2024 4:17 AM IST

நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா விஜயன் காதலித்து வருகிறார். ரகசியமாக காதலித்து வந்த இவர்கள், தற்போது ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை சூசகமாக உறுதி செய்துள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜிஷா விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த டோபின் தாமஸ், '1461 நாட்கள். இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்