"ஆதரவு அளித்த அண்ணன் திருமா" - சந்திப்புக்கு பின் காயத்ரி ரகுராம் டுவிட்
|சென்னையில் உள்ள விசிக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்து பேசினார்.
சென்னை,
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில், நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பாஜக மாநில நிர்வாகி காயத்திரி ரகுராம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார். அப்போது காயத்ரி ரகுராமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பொன்னாடை போர்த்தி நூல் வழங்கினார். காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு பொன்னாடை வழங்கினார்.
சென்னையில் நடைபெற்ற சந்திப்பு மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு என காயத்திரிரகுராம் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது,ஆதரவு அளித்த அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.