< Back
சினிமா செய்திகள்
கவின் நடிக்கும் புதிய படம்
சினிமா செய்திகள்

கவின் நடிக்கும் புதிய படம்

தினத்தந்தி
|
15 Sept 2023 5:32 PM IST

'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு `ஸ்டார்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் இந்தி, தெலுங்கு திரையுலகில் இருந்து இரண்டு பேர் நாயகிகளாக நடிக்கிறார்கள். பிரபல மலையாள நடிகர் ஒருவரும் நடிக்கிறார். இந்தப் படத்தை `பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் டைரக்டு செய்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடந்துள்ளது. 40 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளதாகவும், இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அறிமுக பாடல் காட்சியை பிரமாண்ட அரங்கு அமைத்து படமாக்கி உள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும், அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஒளிப்பதிவு: எழில் அரசு. இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்