< Back
சினிமா செய்திகள்
சம்பளத்தை உயர்த்திய கவின்
சினிமா செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய கவின்

தினத்தந்தி
|
12 May 2023 7:52 AM IST

தமிழில் சத்ரியன், நட்புன்னா என்னன்னு தெரியுமா ஆகிய படங்களில் நடித்தவர் கவின். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். தொடர்ந்து கவின் கதாநாயகனாக நடித்த லிப்ட் படம் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் கவின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த டாடா படம் பெரிய வெற்றியை பெற்று அதிக வசூல் பார்த்தது. கவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை படமாகவும் இது அமைந்தது. அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட மேலும் பலர் இதில் நடித்து இருந்தனர்.

தற்போது புதிய படங்களில் நடிக்க கவினுக்கு வாய்ப்புகள் வருகின்றன. நடன இயக்குனர் ஒருவர் தான் டைரக்டு செய்ய உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க கவினை அணுகியதாகவும் அந்த படத்தில் நடிக்க கவின் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஒரு வெற்றி படத்திலேயே சம்பளத்தை ரூ.2 கோடியாக அவர் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகையை கொடுக்க இயக்குனர் மறுத்துவிட்டாராம்.

மேலும் செய்திகள்