< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
28 Dec 2022 2:59 PM IST

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.

சென்னை,

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ரசிகர்களால் 'தளபதி 67' என அழைக்கப்படும் இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை கவுதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தினார். அநேகமாக அது விஜய் படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்