மீண்டும் வில்லனாக கவுதம்மேனன்
|டைரக்டர் கவுதம்மேனன் ஏற்கனவே பல படங்களில் வில்லனாக வந்தார். தற்போது மீண்டும் `ஹிட் லிஸ்ட்' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. இதில் டைரக்டர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகிறார். சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, சுமிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கே.ஜி.எப். கருடா ராமச்சந்திரா, அனுபமா குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள்.
கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஆக்ஷன் திகில் படமாக உருவாகிறது. கே.எஸ்.ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு: ராம்சரண். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.