கவுதம் கார்த்திக் பிறந்தநாளையொட்டி வெளியான புதிய படத்தின் அறிவிப்பு
|நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார்.
'ஜிப்ஸி', 'ஜப்பான்' படங்களை இயக்கிய ராஜூ முருகன் வசனம் எழுதும் படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி 19-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தை ராஜூ முருகனின் உதவி இயக்குநர் தினா ராகவன் இயக்க உள்ளார். தென்சென்னையில் வாழும் சாமானியனின் யதார்த்த வாழ்வியலோடு அரசியலை நகைச்சுவையாக கூறும் படமாக உருவாகிறது. இந்த படத்தை எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.