< Back
சினிமா செய்திகள்
ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக்
சினிமா செய்திகள்

ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக்

தினத்தந்தி
|
3 May 2023 7:18 AM IST

ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'மிஸ்டர் எக்ஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யாவுக்கு வில்லனாக கவுதம் கார்த்திக் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிறைய கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்து வருகிறார்கள். தற்போது கவுதம் கார்த்திக்கும் வில்லனாகிறார். அதிரடி, திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது.

படத்தில் இடம்பெறும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஆர்யா நடிப்பில் கடந்த வருடம் கேப்டன் படம் வெளியானது. காப்பி வித் காதல், வசந்த முல்லை படங்களில் கவுரவ தோற்றங்களில் வந்தார். ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.

கவுதம் கார்த்திக் நடிப்பில் இந்த வருடம் பத்து தல, ஆகஸ்டு 16, 1947 ஆகிய படங்கள் வந்துள்ளன. தற்போது கிரிமினல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்