< Back
சினிமா செய்திகள்
கவுதம் கார்த்திக் திருமணம் எப்போது?
சினிமா செய்திகள்

கவுதம் கார்த்திக் திருமணம் எப்போது?

தினத்தந்தி
|
7 Aug 2022 2:12 PM IST

பிரபல நடிகையை கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நவரச நாயகனான கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ரங்கூன்', 'முத்துராமலிங்கம்', 'தேவராட்டம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. 'தேவராட்டம்' படத்தில் ஒன்றாக நடித்த போது காதல் மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள். ஆனால் காதலை ஒத்துக் கொள்வதில் இரு தரப்பினரும் மவுனம் சாதித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுதம் கார்த்திக்கிடம், உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கப்பட்டது. அதற்கு, விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன், என அவர் பதில் அளித்தார். மஞ்சிமா மோகன் பற்றிய கேள்விக்கு சிரிப்பை பதிலாக்கி சென்று விட்டார்.

கூடிய விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்