< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்ட கங்குவா படக்குழு!
|12 Nov 2023 6:27 PM IST
நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கங்குவா படக்குழு படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.