< Back
சினிமா செய்திகள்
ஆங்கிலத்தில் வரும் காந்தாரா
சினிமா செய்திகள்

ஆங்கிலத்தில் வரும் 'காந்தாரா'

தினத்தந்தி
|
15 Feb 2023 8:09 AM IST

காந்தாரா படத்தை ஆங்கில மொழியில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றது.

தென்னிந்திய படங்கள் சமீப காலமாக உலக அளவில் பேசப்பட்டு விருதுகளை குவித்து வருகிறது. தெலுங்கில் தயாராகி, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாகுபலி ஏற்கனவே உலக அளவில் முத்திரை பதித்தது.

மலையாளத்தில் தயாரான திரிஷ்யம் படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வந்த 'பொன்னியின் செல்வன்' படமும் பல மொழிகளில் வெளியாகி சர்வதேச அளவில் திரும்பி பார்க்க வைத்தது.

ராஜமவுலி இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான 'ஆர் ஆர் ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது போட்டி இறுதி பட்டியலில் இடம் பிடித்து உள்ளது. இந்த நிலையில் கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற காந்தாரா படத்தை ஆங்கில மொழியில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றது.

காந்தாரா வெறும் ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இருந்தார். காந்தாரா 2-ம் பாகமும் தயாராக உள்ளது. ஆங்கிலத்தில் காந்தாரா வெளியாவதன் மூலம் படத்துக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

மேலும் செய்திகள்