< Back
சினிமா செய்திகள்
ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட்
சினிமா செய்திகள்

ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட்

தினத்தந்தி
|
9 Sept 2024 2:37 PM IST

நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தியன் - 2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனைத் தெரிவிக்கும் விதமாக, முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது புகைப்படத்தையும் இறுதிநாளின் புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.தற்போது, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ஜரகண்டி' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் இம்மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்