< Back
சினிமா செய்திகள்
Game Changer: Music composer Thaman released an update
சினிமா செய்திகள்

`கேம் சேஞ்சர்': அப்டேட் வெளியிட்ட இசையமைப்பாளர் தமன்

தினத்தந்தி
|
24 Sept 2024 4:02 PM IST

இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்தின் புதிய அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார்.

மேலும் செய்திகள்