< Back
சினிமா செய்திகள்
ஓடிடியில் வெளியான கம் கம் கணேஷா
சினிமா செய்திகள்

ஓடிடியில் வெளியான 'கம் கம் கணேஷா'

தினத்தந்தி
|
20 Jun 2024 12:07 PM GMT

ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'கம் கம் கணேஷா' படம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

தெலுங்கு திரைப்பட நடிகரான ஆனந்த் தேவரகொண்டா தன்னுடைய பிளாக்பஸ்டர் ஹிட் 'பேபி' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார். சாய் ராஜேஷ் இயக்கிய அந்தப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது காமெடி திரில்லர் படமான 'கம் கம் கணேஷா' படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை உதய் பொம்மிசெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரகதி ஸ்ரீவஸ்தவா, நயன் சரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைதன் பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த மாதம் 31-ந் தேதி வெளியானது. நகைச்சுவை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படத்தில் நன்றாக வேலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் பிரைம் வீடியோ ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்