< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் 'கதர் 2' ரூ.350 கோடி வசூல்..!!!
|21 Aug 2023 6:00 PM IST
'கதர் 2' திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடி வசூலைத் தாண்டியது.
மும்பை,
கடந்த 2001-ம் ஆண்டு சன்னி தியோல் மற்றும் அமீஷா படேல் நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படம், "கதர்: ஏக் பிரேம் கதா". இந்த படத்தின் தொடர்ச்சியாக 'கதர் 2' படம் எடுக்கப்பட்டு கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் தனது 10வது நாளில் ரூ.38.90 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் 'கதர் 2' திரைப்படம் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடி வசூலைத் தாண்டியது. தற்போது அதன் தயாரிப்பு நிறுவனம் இதனை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர்(தற்போது எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்து உள்ளது.