< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முழுநேர நடிகரான சுப்பிரமணியம் சிவா
|9 Jun 2023 11:14 AM IST
நடிகரான டைரக்டர்கள் பட்டியலில் சுப்பிரமணியம் சிவாவும் இணைந்துள்ளார். இவர் தனுஷ் நடித்த `திருடா திருடி', `சீடன்' மற்றும் `பொறி', `யோகி', `வெள்ளை யானை' போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வெற்றி மாறனின் `வடசென்னை', `அசுரன்', `ரைட்டர்' படங்களில் சுப்பிரமணியம் சிவா நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் சிவகார்த்திகேயனின் `மாவீரன்', ஹரிஷ் கல்யாணின் `டீசல்', சதிஷின் `வித்தைக்காரன்', ஜி.வி.பிரகாஷின் `ரீபள்', `மனுஷி', `ஜூ மேக்கர்', `பாறைதேசம்', `கருப்பு கண்ணாடி', `காடுவெட்டி' உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் பல பட வாய்ப்புகள் குவிகின்றன.