'16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான்'- நடிகை ஐஸ்வர்யா
|நான் என்னுடைய 16 வது வயதில் பாலைவன ரோஜா திரைப்படத்தை பார்த்தேன் என்று ஐஸ்வர்யா கூறினார்.
சென்னை,
சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டி ஒன்றில் "16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான் என்று கூறினார்". அப்போது அவர் பேசியதாவது,
"நான் பிரபு சாரின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய 16 வயதில் இருந்து நான் காதலிப்பது பிரபு சாரை மட்டும்தான். அன்றும் இன்றும் என்றும் நான் அவரின் ரசிகையாகவே இருப்பேன்.
நான் என்னுடைய 16-வது வயதில் பாலைவன ரோஜா திரைப்படத்தை பார்த்தேன். அந்தப் படத்தில்தான் பிரபுசாரை முதன் முறையாக பார்த்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.
அப்போதிருந்து இப்போது வரை எனக்கு பிரபு சார் என்றால் மிகவும் இஷ்டம். நான் பிரபுவின் வெறித்தனமான ரசிகை என்பது அவருடைய மனைவியான புனிதா அக்காவிற்கு நன்றாகத் தெரியும்.
நாங்கள் இணைந்து 'ஆம்பள' திரைப்படத்தில் நடித்தோம். அப்போது அவரிடம் விளையாட்டாக என்னை பெரிய வீடாகவோ, அல்லது சின்ன வீடாகவோ வைத்துக் கொள்ளுங்கள். என் வாழ்க்கை முழுவதும் உங்களை நான் மறைந்திருந்து பார்த்தால் மட்டும் போதும் என்று சொன்னேன்.
சுயம்வரம் திரைப்படத்தில் முதலில் கமிட் ஆனது வேறு ஒரு நடிகை. ஆனால் அதில் கழிப்பறை தொடர்பான காட்சிகள் இருந்த காரணத்தால் அவர் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார். இந்த நிலையில்தான் பி. வாசு அந்தப்படத்தில் என்னை கமிட் செய்தார். எனக்கு முதலில் அந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க தயக்கமாகவே இருந்தது. ஆனால் வாசு என்னை சமாதானம் செய்து அந்தப்படத்தில் நடிக்க வைத்தார்" இவ்வாறு பேசினார்.