< Back
சினிமா செய்திகள்
காந்தி வாழ்க்கை வரலாற்று தொடரில் ஸ்பைடர் மேன் நடிகர்
சினிமா செய்திகள்

'காந்தி' வாழ்க்கை வரலாற்று தொடரில் 'ஸ்பைடர் மேன்' நடிகர்

தினத்தந்தி
|
2 May 2024 5:39 PM IST

‘ஹாரி பாட்டர்’ படப்புகழ் நடிகர் டாம் பெல்டன் ‘காந்தி’ தொடரில் வரவிருக்கிறார்.

ஹன்சல் மேத்தா இயக்கத்தில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வர இருக்கும் மகாத்மா காந்தியின் பயோபிக் தொடரான 'காந்தி'யில் 'ஹாரி பாட்டர்' படப்புகழ் நடிகர் டாம் பெல்டன் நடிக்க உள்ளார். இந்த தொடரில் நடிக்கும் சர்வதேச நடிகர்களின் பட்டியலை படக்குழு இன்று வெளியிட்டது. டாம் பெல்டனுடன் நடிகர்கள் லிபி மாய், மோலி ரைட், ரால்ப் அடேனி, ஜேம்ஸ் முர்ரே, லிண்டன் அலெக்சாண்டர், ஜோன்னோ டேவிஸ், சைமன் லெனான் மற்றும் பலர் இணைந்துள்ளனர்.

இந்தத் தொடரில் நடிகர் பிரதிக் காந்தி, காந்தியாக நடிக்கிறார். மற்ற சர்வதேச நட்சத்திரங்களுடன் டாம் பெல்டனை நடிக்க வைக்கும் முடிவைப் பற்றி பேசிய ஹன்சல் மேத்தா, "திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் தொடரை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காகவே இந்த முடிவு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கதை, குறிப்பாக, லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் அவர் கற்றுக்கொண்டு வளர்ந்த விஷயங்கள் நம் காலத்திற்கான கதை. இதுவரை யாரும் அதிகம் அறிந்திடாத பகுதி. இதை இயக்குவதில் நான் பெருமைப் படுகிறேன்" என்றார்.

ஹாரி பாட்டர் தொடரில் டிராகோ மால்போயின் பாத்திரத்தில் நடிக்கும் பெல்டன், "லண்டனில் காந்தியின் ஆரம்ப கால கதையைச் சொல்லும் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்